அதிர்ச்சி#: இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
அதிர்ச்சி#: இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் நேற்றைய முடிவில் மொத்த கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துவிட்டது.
உலகத்தையே முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸால் இந்தியாவில் நேற்று மட்டும் 4629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் மொத்த பாதிப்பு 100328 ஆக உயர்ந்துள்ளது.
ஒரு லட்சத்திற்கும் மேல் பாதிப்புகளை சந்தித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 11 ஆவது நாடாக உள்ளது. முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் பாதிப்பு 15 லட்சத்தை கடந்துவிட்டது.
இதுவரை உலக அளவில் மொத்த பாதிப்பு 48 லட்சத்தை கடந்துவிட்டது. மொத்த இறப்பு 3 லட்சத்தி 20 ஆயிரத்தை கடந்துவிட்டது.
இந்தியாவில் பாதிக்கப்பட்ட 100328 பேர்களில் 3156 பேர் பலியாகியுள்ளனர். 39233 பேர் குணமடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 57933 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.