மகிழ்ச்சியான செய்தி.! இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு! விரைவில் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை!

மகிழ்ச்சியான செய்தி.! இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு! விரைவில் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை!


Corona Vaccine testing

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேரு ஒரே நாளில் 3949 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 5 வது நாளாக 3500-க்கும் அதிகமாக இருந்தது.

கொரோனா வைரஸிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகளவில் கொரோனா தடுப்பூசியை (Corona Vaccine) கண்டுபிடிக்க வேண்டும் என விரைவான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. 

corona

அவர்கள் கண்டுபிடித்த தடுப்பூசிக்கு ‘கோவேக்சின்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி விலங்குகளுக்கு செலுத்தி பார்க்கப்பட்டுள்ளது. அந்த சோதனையில், இது பாதுகாப்பானது மற்றும் சிறந்த நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அல்லது கட்டுப்படுத்த உதவுகிறதா என்பதை விட, பாதுகாப்பானதா என்பதை தெரிந்துகொள்ள பயோடெக் நிறுவனம் இரண்டு கட்டங்களாக தடுப்பு மருந்துகளை பரிசோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் அனுமதி அளித்துள்ளனர்.