அடேங்கப்பா! கொரோனாவின் தாக்கம் இவ்ளோ வருஷத்துக்கு நீடிக்குமா..? உலக சுகாதார நிறுவனம் தகவல்.!

அடேங்கப்பா! கொரோனாவின் தாக்கம் இவ்ளோ வருஷத்துக்கு நீடிக்குமா..? உலக சுகாதார நிறுவனம் தகவல்.!



corona-states-told-about-world-health-organisations

கடந்த 2019 ஆம் டிசம்பர் மாதத்தில் முதல்முறையாக சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. சீனாவில் பல உயிர்களை பலி வாங்கிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவி ஆட்டிப்படைக்கிறது. இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால், உலகம் முழுவதும் சுமார் 150 க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள் தடுப்பு மருந்துகளை கண்டறிய தீவிரம் காட்டி வருகிறது.   இருந்தாலும் அதன் முதல் பயன்பாட்டை 2021ஆம் ஆண்டின் தொடக்கம் வரை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் கூறியது.

Corona states

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் அவசரக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்ற உலக சுகாதார அமைப்பு (WHO) இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்று கூறும்போது: கொரோனா தொற்று நோய், ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை ஏற்படும் சுகாதார நெருக்கடி. இதன் விளைவுகள் மேலும் சில பத்தாண்டுகளுக்கு உணரப்படும் என்று தெரிவித்தார்.