இந்தியா Covid-19

இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பின் புதிய உச்சம்.! கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

Summary:

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏராளமான

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்தது. கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன .

இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 93,528 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 14,71,877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 11,44,93,238 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement