
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,398 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,398 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97,96,770 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 414 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,186 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37,528 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Advertisement
Advertisement