உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.! இந்தியாவில் மட்டும் எவ்வளவு தெரியுமா?

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.! இந்தியாவில் மட்டும் எவ்வளவு தெரியுமா?


corona increased in india

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவால் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், அடுத்தபடியாக 2-வது இடத்தில் தொடர்ந்து இந்தியாவும் நீடிக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41,469,042 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 30,907,529 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,136,222 ஆக அதிகரித்துள்ளது.

corona

கொரோனா அதிகம் பாதித்த அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 8,584,819 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 227,409 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,705,158 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 116,653 ஆகவும் உயர்ந்துள்ளது.