கொரோனா அச்சுறுத்தல்: இந்தியாவில் மட்டும் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பலி.?



corona-death-increase-in-india

சீனாவின் உக்கான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த கொடூர வைரஸை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைவாக இந்தநிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர்களால் சற்று அதிகரிக்க தொடங்கியது. அந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

corona

இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளா, மத்திய பிரதேசம், டெல்லியில், 58 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்து உள்ளது.கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு 68பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்,தொடர்புடையவர்கள் 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 183 பேர் குணமாகியுள்ளனர்.