3 வது அலை அச்சம்..!! குறிப்பா அந்த பகுதிக்கு கேட் போட்ட தமிழக அரசு!! பரிசோதனை தீவிரம்..

3 வது அலை அச்சம்..!! குறிப்பா அந்த பகுதிக்கு கேட் போட்ட தமிழக அரசு!! பரிசோதனை தீவிரம்..



corona-cases-rise-in-kerala-latest-updates

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதை தொடர்ந்து தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா 2 வது அலை இந்தியாவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் வசதி இல்லாமல் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். தற்போதுதான் கொரோனா 2 வது அலை பாதிப்பு நாடு முழுவதும் சற்று குறைய தொடங்கி, பள்ளி  கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் மக்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது.

corona

செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் கொரோனா 3 வது அலை பாதிப்பு உச்சத்தை தொடலாம் என நிபுணர்கள் ஏற்கனவே கூறியிருந்தநிலையில், தற்போதிருக்கும் கொரோனா தொற்று செப்டம்பரில் மேலும் அதிதீவிரமாக உருமாற்றம் அடைந்தால், நாட்டில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே மூன்றாம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கொரோனா 3 வது அலை குறித்த அச்சம் மக்கள் மத்தியில் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்திவருகிறது. அண்டைமாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்துவரும்நிலையில், கேரளா - தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புளியரை வாகன சோதனைச்சாவடி அருகே கொரோனா தடுப்பு மருத்துவ சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருகிறவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா? என்பதையும் ஆய்வு செய்கின்றனர்.

கேரளாவில் இருந்து வரும் நபர்கள் தடுப்பூசி போடவில்லையெனில் போலீசார் அவர்களை திருப்பி அனுப்பிவருகின்றனர்.