3 வது அலை ஆரம்பம்?? மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி!! மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!!

3 வது அலை ஆரம்பம்?? மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி!! மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!!


corona-cases-again-raising-in-india

நாடுமுழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா 2 வது நாடு முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா இரண்டவது அலை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் அன்றாட பாதிப்பு 35 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், நாட்டில் அன்றாட பாதிப்பு 1 லட்சத்துக்கு அதிகமாவும் பதிவாகிவந்தது.

corona

கடந்த பல வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பண்டிகை காலம் வருவதால் அடுத்த இரண்டு மாதங்கள் எச்சரிக்கையுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 3 வது அலை செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடலாம் என நிபுணர்கள் குழு அறிவுறுத்திஉள்ளநிலையில், கொரோனா 3 வது அலை குறித்த பயம் தற்போதில் இருந்தே மக்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.