பிரான்ஸில் இருந்து வந்த நபருக்கு 1000 பேர் சூழ திருமணம்! கொரோனா பீதியால் பதற்றம்



Corona

பிரான்ஸில் இருந்து 9 நாட்களுக்கு முன்பு தெலுங்கானாவிற்கு வந்த நபருக்கு கடந்த வியாழக்கிழமை 1000 பேர் சூழ திருமணம் நடந்ததால் அதிகாரிகள் மிகவும் பதற்றத்தில் உள்ளனர்.

நாடு முழுவதும் பலவித கட்டுபாடுகள் விதித்துள்ள நிலையில் தெலுங்கானாவின் வாராங்கல் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை பல அரசியல் தலைவர்கள், உறவினர்கள் நண்பர்கள் என 1000 பேருக்கு மேல் கலந்துகொண்ட திருமணம் ஒன்று நடந்துள்ளது.

corona

இதில் வேடிக்கை என்னவென்றால் திருமண மாப்பிள்ளை 9 நாட்களுக்கு முன்பு தான் பிரான்ஸில் இருந்து வந்துள்ளார். ஹைதாராபாத்திற்கு வந்த அந்த நபரை முதல் கட்ட சோதனை செய்த மருத்துவ அலுவலர்கள் 14 நாட்கள் ஹைதராபாத்தில் உள்ள வீட்டிலே தான் தங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

அந்த சமயத்தில் கூட அந்த நபர் தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது என்பதை கூறவில்லை. தற்போது வாராங்கலில் திருமணம் செய்துள்ளார். இதனையறிந்த அதிகாரிகள் உடனடியாக மணமக்கள் மற்றும் அவர்களது வீட்டார்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.

மேலும் திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரின் பட்டியலையும் சேகரித்து வருகின்றனர். மணமகனுக்கு எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லையாம். ஒருவேளை அவருக்கு கொரோனா இருப்பதாக முடிவுகள் வந்தால் நிலைமை என்னவாகும் என்பதை எண்ணி அலுவலர்கள் வருத்தத்தில் உள்ளனர்.