அடக்கடவுளே!! மனைவியின் தொடர் சண்டை... புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு.. கதறும் குடும்பத்தினர்..!continual-fight-of-the-wife-the-tragic-decision-taken-b

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் மகேஸ்வரா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கவனா என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பின் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கவனா தனது கணவர் மகேஸ்வராவை மதிக்காமலும் அவரது குடும்பத்தை தவறாகவும் பேசி வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த மகேஸ்வரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Continual fight

மேலும் தனது மகனின் தற்கொலைக்கு அவரது மனைவி கவனா தான் காரணம் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மகேஸ்வராவின் தாய் ரத்தினம்மா. மேலும் புகாரின் அடிப்படையில் கவனா மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.