பாஜகவில் இணையும் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்.. காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி.!

பாஜகவில் இணையும் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்.. காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி.!



Congress Senior Leader from MP Join BJP Today 9 March 2024 

 

2024 மக்களவை பொதுத்தேர்தல் இன்னும் சில மாதத்தில் நடைபெறுகிறது.  இந்த தேர்தலுக்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது. 

இதனால் ஆளும் கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடுமையான அரசியல் மோதல்போக்கு நிலவி வருகிறது. பல மாநிலங்களில் கட்சித்தாவல் அரசியல் சாகசங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்த்த மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேஷ் பச்சோரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர சிங் ராஜூஹெடி ஆகியோர் இன்று பாஜகவில் இணைகின்றனர். 

இது காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சிதரும் தகவலாக அமைந்து இருக்கிறது.