2024 நாடாளுமன்ற தேர்தலில் ஜெயிப்பது எப்படி?.. காங்கிரஸ் தலைமையிடம் பி.கே விளக்கம்.!

2024 நாடாளுமன்ற தேர்தலில் ஜெயிப்பது எப்படி?.. காங்கிரஸ் தலைமையிடம் பி.கே விளக்கம்.!


Congress Chief Discuss with Prasanth Kishor about 2024 Parliament Election

நாடாளுமன்ற தேர்தல் 2024 தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டது. இதில், பி.கேவும் கலந்துகொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான அம்பிகா சோனி, திக்விஜய் சிங், மல்லிகார்ஜுனா கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் சோனியா காந்தியின் இல்லத்திற்கு இன்று வருகை தந்தனர். இவர்களுடன் ராகுல் காந்தி மற்றும் கே.சி வேணுகோபால், தேர்தல் வியூக வகுப்பாளர் என்று கருதப்படும் பிரசாந்த் கிஷோரும் ஆகியோரும் உடன் இருந்தனர். 

congress

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இடையே ஆலோசனை 4 மணிநேரம் நடைபெற்ற நிலையில், அதனைத்தொடர்ந்து கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "பிரசாந்த் கிஷோர் 2024 தேர்தல் வியூகம் தொடர்பாக விளக்கி இருக்கிறார். 

congress

இந்த திட்ட வியூகம் காங்கிரஸ் கட்சியின் பிற மூத்த தலைவர்களாலும் பார்க்கப்ட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும். பிரசாந்த் கிஷோர் காங்கிரசின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருப்பாரா? என்பது ஒருவாரத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.