தமிழகம் இந்தியா

சீனா அதிபர் சென்னையில் பயனப்டுத்தும் கார் பற்றிய சில முக்கிய தகவல்கள். அதன் விலை மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

Summary:

China president car Hongqi L5 Sedan features

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று மதியம் 2 மணி அளவில் விமானம் மூலம் சென்னை வந்து இறங்கினார். இன்று மற்றும் நாளை சென்னையில் தங்க உள்ள சீன அதிபருடன் இந்திய பிரதமர் மோடி இரு நாட்டு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

சென்னை வந்துள்ள சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு சென்று பின்னர் அங்கிருத்து மஹாபலிபுரத்துக்கு சாலை வழியே காரில் செல்ல உள்ளார். இந்தியவில் உள்ள கார்களை பயன்படுத்தாமல் சீனாவில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட அந்நாடு கார்களையே சீன அதிபர் இங்கு பயன்படுத்த உள்ளார்.

இந்நிலையில் சீன அதிபர் பயன்படுத்தும் கார் குறித்து சில முக்கிய தகவல்களை இங்கே பார்ப்போம்.

Hongqi L5 Sedan என்னும் உயர்தர சொகுசு காரைத்தான் சீன அதிபர் இங்கு பயன்படுத்த உள்ளார். FAW என்ற கார் நிறுவனம் தயாரிக்கும் இந்த கார் சீனாவில் பயன்படுத்தப்படும் முக்கிய சொகுசு கார்களில் ஓன்று.

18 அடி நீளமும், 6.5 அடி அகலமும் கொண்ட இந்த காரின் மொத்த எடை மட்டும் 3,152 kg. காரின் மொத்த உயரம் 5 அடி. அதி நவீன வசதிகளை கொண்ட இந்த சொகுசு காரனது வெறும் 8 நொடியில் 0 வில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு மாறக்கூடியது.

மேலும், குண்டு துளைக்காத கண்ணாடிகளால் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பாகும். இந்த காரின் மொத்த விலை சுமார் $760,000 அமெரிக்கன் டாலர். அதவது இந்திய மதிப்பில் சுமார் 5 கோடியே 39 லட்சம் ஆகும்.


Advertisement