சீன வீரர்கள் ஒருத்தர் கூட சாகவில்லை, அனைத்தும் பொய்! சீனா அதிரடி மறுப்பு!

சீன வீரர்கள் ஒருத்தர் கூட சாகவில்லை, அனைத்தும் பொய்! சீனா அதிரடி மறுப்பு!


china-army-mans-death-is-fake

கிழக்கு லடாக் எல்லை பகுதியில்  கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 5 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான தகவல் என சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லிஜியன் சோ கூறி உள்ளார்.

India

இந்திய - சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சு குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் பேசுகையில், இரு நாடுகளுக்கு இடையே உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்த விஷயத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எல்லையில் பதற்றத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, இரு தரப்பும் உறுதி அளித்துள்ளன.

கல்வான் பகுதியில் நடந்த மோதலின் போது, சீன வீரர்கள், 40 பேர் உயிரிழந்ததாக தொடர்ந்து கேட்கப்படுகிறது. ஊடகங்களில் தான் இதுபோன்ற செய்திகள் வெளியாகின்றன. இந்த மோதலில் சீன வீரர்கள் யாரும் இறக்கவில்லை. இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும் என தெரிவித்துள்ளார்.