மோடி அங்கிள் சொல்லியிருக்காங்க வேணாம்! லைக்குகளை அள்ளும் கியூட் சிறுவனின் வீடியோ!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பலநாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில், இதுவரை 10363 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.339 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் பாதிப்புகள் மட்டும் உயிரிழப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது, சமூக விலகலை பின்பற்ற வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு குறித்து சிறுவன் ஒருவன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், அம்மா மகனிடம், வெளியே செல்வோமா? என்று கேட்க, அதற்கு அவரது மகன் இல்லை தயாராகவில்லை, இது ஊரடங்கு. மோடி அங்கிள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று சொல்லியிருக்கிறார் என பதிலளிக்கிறான். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.