இரவு நேரம்!! நைட் டூட்டி முடிச்சிட்டு காலையில் வந்து தனது காரை பார்த்த மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
இரவு நேரம்!! நைட் டூட்டி முடிச்சிட்டு காலையில் வந்து தனது காரை பார்த்த மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல வெளியே வந்த போது தன் காரை பார்த்து அதிர்ந்துள்ளார் மருத்துவர் ஒருவர்.
ஜம்மு காஷ்மீரின் பதான்கோட் சிவில் மருத்துவமனையில் கொரோனா பிரிவில் மருத்துவராக பணியாற்றிவருகிறார் ஆகாஷ் என்ற மருத்துவர். இவர் சம்பவம் நடந்த அன்று இரவு மருத்துவமனையில் இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்ல தயாரானபோது தனது காரை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
காரணம், மருத்துவமனைக்கு வெளியே நிறுத்திவகைப்பட்டிருந்த மருத்துவரின் காரில் இருந்து காரின் நான்கு சக்கரங்களையும் யாரோ திருடிவிட்டு, சக்கரத்துக்கு பதிலாக செங்கல் கற்களை வைத்திருந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர். இரவு நேரத்தை பயன்படுத்தி மருத்துவரின் காரில் இருந்து சக்கரங்களை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.