அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பெண்பயணியிடம் ஆபாச படம் காட்டிய டாக்ஸி டிரைவர்!. பெண்ணின் துணிச்சல் முடிவு!.
டாக்ஸி ஓட்டுநர் தனது பயணத்தின் போது ஆபாச படங்களை பார்த்ததாக, பெண் வாடிக்கையாளர் ஒருவர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு பெண் ஒருவர் டாக்ஸி காரில் பயணம் செய்துள்ளார்.
பணிக்காக தனது அலுவலகத்திற்கு டாக்ஸியில் அந்த பெண் சென்றுகொண்டிருந்த போது, கார் ஓட்டுநர் காரை ஓட்டியவாறே தனது கைப்பேசியில் ஆபாச படம் பார்த்துள்ளார்.
அதுவும் பின்னால் அமர்ந்திருக்கும் பெண் பயணிக்கு தெரியும்படியாக ஓட்டுநர் ஆபாச படம் பார்த்துள்ளார். இதனால் கோபமடைந்த பெண் பயணி, படத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
ஆனால், ஓட்டுநர் அதனை கண்டுகொள்ளாததால் அந்த பெண் காரை நிறுத்தியுள்ளார். அதன் பின்னர், தனது அலுவலகத்திற்கு சென்று நடந்தவற்றை தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த பெண் காவல்துறையிலும், ஓலா டாக்ஸி வாடிக்கையாளர் சேவை மையத்திலும் புகார் அளித்துள்ளார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஓலா நிறுவனம் இதுகுறித்து கூறுகையில் ‘இந்தச் சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், எங்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
தற்போது உடனடியாக அந்த ஓட்டுநரின் உரிமத்தை நீக்கியுள்ளோம். எங்களது வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் எப்பொழுதும் துணை நிற்போம். நடைபெற்று வரும் விசாரணையில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என கூறியுள்ளது.