இந்தியா

லாரி மீது பேருந்து மோதி கொழுந்துவிட்டு எரிந்த தீ! 20 பேர் கருகிய நிலையில் உயிரிழப்பு! பதறவைத்த வீடியோ!

Summary:

bus accident in up


உத்தரப்பிரதேச மாநிலம் பருக்காபாத்தில் இருந்து ராஜஸ்தான் நோக்கி சொகுசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 45 பயணிகள் பயணித்துள்ளனர். அப்போது கணோஜ் மாவட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. 

பேருந்து லாரி மீது மோதியதில், பேருந்து தீப்பிடித்து எரிந்தது. அப்போது உள்ளிருந்த பயணிகள் அனைவரும் அலறல் சத்தம் போட்டுள்ளனர். பல பயணிகள் வெளியேற முடியாமல் தத்தளித்துள்ளனர். சிலர் அதிர்ஷ்டவடசமாக பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.

அங்கு ஏற்பட்ட கொடூர விபத்தில் 20 பேர் பேரூந்துக்குள்ளேயே கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து அம்மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

இந்தநிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


Advertisement