முதல் இரவு அன்று மொட்டைமாடியில் தூங்கிய என் மனைவியை காணோம்!! திருமணம் முடிந்த மறுநாளே மாப்பிளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..

முதல் இரவு அன்று மொட்டைமாடியில் தூங்கிய என் மனைவியை காணோம்!! திருமணம் முடிந்த மறுநாளே மாப்பிளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..


Bride escaped from terrace on first night

திருமணம் முடிந்த அன்று இரவே மணப்பெண் மாயமான சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் கோர்மி கிராமத்தை சேர்ந்தவர் சோனு ஜெயின். நீண்ட வருடமாக திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அவதிப்படுவந்த சோனு மிகவும் விரக்தியில் இருந்துவந்துள்ளார். அந்த சமயத்தில்தான் சோனுவுக்கு  உதால் ஹாதிக் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார்.

சோனுவின் நிலையை அறிந்துகொண்ட உதால் ஹாதிக், திருமணத்திற்கு தான் பெண் தேடி தருவதாகவும், அதற்கு கட்டணமாக 1 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் எனவும் சோனுவிடம் கூறியுள்ளார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து, 90 ஆயிரம் பணத்தை  உதால் ஹாதிக்யிடம் கொடுத்துள்ளார்.

Crime

சில நாட்களில் அனிதா ரத்னக்குமார் என்ற பெண்ணை உதால் ஹாதிக் சோனுவுக்கு அறிமுகம் செய்துவைத்து, பின்னர் அவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து, திருமணமும் நடந்து முடிந்துள்ளது.

திருமணம் முடிந்த அன்று இரவு, மணப்பெண்ணின் உறவினர்கள் என 2 பேர் மாப்பிள்ளையின் வீட்டில் தங்கியுள்ளனர். அதேநேரம், முதல் இரவு அறைக்குள் சென்ற அனிதா ரத்னக்குமார் தனக்கு இந்த அறையில் இருப்பது சிரமமாக இருப்பதாகவும், தான் மொட்டை மாடிக்கு சென்று தூங்குவதாகவும் கூறிவிட்டு மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மறுநாள் காலையில் சோனு எழுந்து பார்த்தபோது தனது மனைவியை வீட்டில் காணவில்லை. அவரது உறவினர்களையும் காணவில்லை. இந்நிலையில்தான் மொட்டை மாடியில் இருந்து தப்பிச்சென்ற அனிதா ரத்னக்குமாரை இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் கைது செய்த தகவல் சோனுவுக்கு தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சோனு இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அனிதா ரத்னக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டுபேரை கைது செய்துள்ள போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.