வீடியோ: குழந்தைகளுக்கு நாய்களுடன் நடந்த திருமணம்.. மக்கள் கூறும் அதிர்ச்சி காரணம்..

வீடியோ: குழந்தைகளுக்கு நாய்களுடன் நடந்த திருமணம்.. மக்கள் கூறும் அதிர்ச்சி காரணம்..


Boy marries dog near Odisha

குழந்தைகளை நாய்களுக்கு திருமணம் செய்துவைக்கும் வினோத சடங்கு ஒன்று ஒடிசா மாநிலத்தில் நடந்துவருகிறது.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் அருகே இரண்டு ஆண் குழந்தைகளை நாய்களுக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள மக்களின் மூட நம்பிக்கையால் இந்த சடங்கு நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. குழந்தைகளின் ஈறுகளில் பல் முளைக்க துவங்குவதை கெட்ட சகுனமாக கருதி அதற்கு இந்த சடங்கு செய்கிறார்கள்.

ஆண் குழந்தை என்றால் பெண் நாய்க்கும், அதுவே பெண் குழந்தை என்றால் ஆண் நாய்க்கும் திருமணம் செய்துவைத்து இதுபோன்ற சடங்கை அந்த பகுதி மக்கள் கடைபிடித்துவருகின்றனர். இந்நிலையில் இதுபோன்று நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.