நம்மால் கண்ணை திறந்து கொண்டே செய்ய முடியாததை இந்த சிறுவன் கண்களை மூடிக்கொண்டே செய்கிறான் பாருங்கள்! வீடியோ!



Boy assemble rubic cube closing eyes

உலகின் சிறு சிறு மூலைகளில் இருக்கும் திறமைசாலிகள் கூட தற்போது சமூக வலைத்தளங்களின் மூலம் வெளியுலகிற்கு தெரியவருகின்றனர். அந்த வகையில், பழங்குடி இனத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது இரு கண்களையும் மூடிக்கொண்டு ரூபிக் க்யூப்களை சரிசெய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

பர்வீஸ் கஸ்வான் என்ற ஐஎஃப்எஸ் ஆபீசர் ஒருவர் இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட சிறுவன் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள லாங்டிங் என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இந்த பகுதி பழங்குடி மக்கள் அதிகம்  வசிக்கும் ஆகும்.

நம்மால் கண்களை திறந்துகொண்ட ரூபிக் க்யூப்களை சரிசெய்வது என்பது சற்று கடினமான காரியம். ஆனால், இந்த சிறுவனோ தனது இரண்டு கனகளையும் மூடிக்கொண்டு ஒரு நிமிடத்தில் ரூபிக் க்யூப்களை சரி செய்து அசத்தியுள்ளான்.