இந்தியா

சாலையோரத்தில் அனாதையாக கிடந்த மர்ம பெட்டி! ஆசையாக திறந்த நபருக்கு நேர்ந்த பரிதாபம்!

Summary:

box busted in hyderabad

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ராஜேந்திரா நகர் பகுதியில் பி.வி.நரசிம்மராவ் எக்ஸ்பிரஸ் மேம்பால சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டு இருந்தது. அதன் அருகில் இருந்த பிளாட்பாரத்தில் சிறிய மர்ம பெட்டி ஒன்று கிடந்துள்ளது. இந்தநிலையில் அந்தவளியாக சென்ற அலி என்பவர் அந்த பெட்டியை திறக்க முயன்ற போது, எதிர்பாரதவிதமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

மர்ம பெட்டி வெடித்ததால் அலியின் இரண்டு கைகளும் துண்டித்த நிலையில் இரத்த காயங்களுடன் சாலையில் மயங்கி விழுந்தார். வெடி சத்தத்தை கேட்டு அருகிலிருந்த மக்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். அலி மயங்கி கிடந்ததை பார்த்த சிலர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்,

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement