பாஜக மகளிர் அணி நிர்வாகி தற்கொலை வழக்கில் பாஜக பிரமுகர் தலைமறைவு.. கள்ளக்காதலால் நடந்த பரபரப்பு சம்பவம்..!!bjp women team leader conduct suicide

பாஜக மகளிர் அணி நிர்வாகி தற்கொலை செய்த விவகாரத்தில் பாஜக பிரமுகர் தலைமுறைவாகியுள்ளார். 

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்கோடு சிஎன் புரம் நடுவா காட்டுப்பாளையம் பகுதியை சார்ந்தவர் சரண்யா (வயது 27). இவர் பாலக்காடு சட்டமன்ற தொகுதியின் பாஜக மகளிர் அணி பொருளாளர் ஆவார். இவருக்கு ரமேஷ் என்ற கணவர் இருக்கிறார். தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சரண்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளவே, அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரிக்கையில், அவர் கைப்படை எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டது. 

கடிதத்தில் பாலக்காடு பாஜக பிரமுகர் பிரஜீவ் என்பவருடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும், அவருடன் நெருங்கிய தொடர்பு மூலமாக பலமுறை என்னை கட்டாயப்படுத்தி பயன்படுத்தி வந்தார் என்றும், அவருக்கு நான் மட்டுமல்லாது பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. ஒரு கட்டத்தில் என்னை அவர் சமூகத்தில் தவறாக பெண்ணாக சித்தரிக்க தொடங்கிவிட்டார். 

இதனால் நான் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது தற்கொலைக்கு பிரஜீவ் தான் காரணம் என்று எழுதியுள்ளார். இதனால் காவல்துறையினர் பிரஜீவின் மீது வழக்குப்பதிவு செய்யவே தகவலறிந்த பிரஜீவ தலைமறைவாகியதால் அவரை தேடி வருகின்றனர்.