கடைசி ஆசை... குழந்தையை தூக்கி மார்போடு கட்டி அணைத்த அடுத்த நொடி தாய்க்கு நேர்ந்த சோகம்...! கதறி துடித்த கணவன்.. கண்ணீர் வரவழைக்கும் துயர தருணம்!!!
பீகார் மாநிலத்தின் பாகல்பூர் பகுதியில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் உயிரிழக்கும் முன் தனது குழந்தையை கடைசியாக பார்க்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொண்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடைசி ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினர்
தகவலின்படி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அந்த பெண் நீண்ட நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், தனது குழந்தையை ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என்று குடும்பத்தினரிடம் அவர் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வில் அம்பு திரைப்பட இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் காலமானார்! திரையுலகமே அதிர்ச்சியில்....!!!
குழந்தையை அணைத்தபடியே உயிர் பிரிந்த தாய்
இதையடுத்து, குடும்பத்தினர் குழந்தையை அவரது கைகளில் கொடுத்தனர். தனது குழந்தையை மார்போடு அணைத்தபடி சில நிமிடங்கள் இருந்த அவர், அமைதியாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்த தருணத்தை பார்த்த மருத்துவமனை வளாகத்தில் இருந்த உறவினர்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் கண்கலங்கினர்.
நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
மனைவியின் உயிரிழப்பால் கணவரும் துயரத்தில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாயின் பாசம் எந்த சூழலிலும் மாறாது என்பதை உணர்த்தும் இந்த சம்பவம், சமூக வலைதளங்களிலும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
दुनिया में कभी भी कोई मां का जगह नहीं ले सकता और आखिरी सांस तक बच्चों का साथ देती है
— ROHIT SINGH (@desHi__chora) August 1, 2026
भागलपुर से इंसानियत को झकझोर देने वाला मामला आया मां कैंसर से महीने से पीड़ित थी
जब लास्ट स्टेज आ गया तो अपने बच्चे को देखने का बात रखी फिर बच्चे को जैसे गोद में रखी कुछ पल में दुनिया छोड़ गई… pic.twitter.com/jYnUeqyUph
இதையும் படிங்க: படுத்த படுக்கையாக கிடந்த கணவனின் கடைசி ஆசை! ஒரே ஒரு முறை காட்டிடுங்க... மனைவி செய்த துரோகம்! கடைசி வரை காணாமலே துடிதுடித்து போன உயிர்!!!