செல்போன் திருடனை ஜன்னலுக்குள் லாக் செய்து இரயிலில் கதறவிட்ட பயணிகள்.. பரபரப்பு சம்பவத்தின் பகீர் வீடியோ..!



bihar-man-train-window-video

ஓடும் இரயிலில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் பயணிகளால் கதறவிடப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.

பீகாரில் ஓடும் இரயில் இளைஞர் கதறிக்கொண்டு இருக்க, அவர் ஜன்னல் வழியே உயிருக்கு போராடியது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பகிரப்பட்டு வந்தது. 

இந்த வீடியோ குறித்து விசாரணை செய்கையில், இளைஞர் திருட்டு செயலில் ஈடுபடுபவர் என்பது உறுதியானது. அதாவது, ஜன்னல் ஓரத்தில் இருந்த பயணியிடம் இளைஞர் செல்போன் திருட முயற்சித்துள்ளார். 

சுதாரித்த பயணி செல்போனை மீட்டுக்கொண்ட நிலையில், இளைஞரின் கை ஜன்னலில் சிக்கி இரயில் புறப்பட்டுள்ளது. இதனால் அவர் அப்படியே 10 கி.மீ தூரம் பயணம் செய்துள்ளார். அதற்கு பின்வந்த இரயில் நிலையத்தில் இளைஞர் காவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டார்.