கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி; ஆத்திரத்தில் காவலர்களை பதறவைத்த கணவன்.!
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சில மணிநேரங்களில் வெடிக்கும் என்றும் ஒரு நபர் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பேசிவிட்டு அழைப்பு துண்டித்துள்ளார்.
இதனால் பாட்னா ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவலர்கள் உஷார்படுத்தப்பட்டு சோதனை தீவிரமாக நடைபெற்றது. தேடுதல் வேட்டையில் எந்த ஒரு வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், மிரட்டல் விடுத்த நபரை அதிகாரிகள் தேடி கண்டுபிடித்துள்ளனர்.
அதிகாரிகள் ராஜேஷ்குமார் ரஞ்சன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்திய போது, தனது மனைவி கள்ளக்காதலருடன் ஓட்டம் பிடித்ததால் தனிமையில் இருந்த கடுப்பில் இவ்வாறாக செய்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அவரின் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.