இந்தியா

பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம். சேரன், லாஷ்லியா இருவரும் ஒன்றாக வெளியேற்றம். ப்ரோமோ வீடியோ.

Summary:

Bigg boss lashliya and seran eliminated from house

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள சீசன் 3 இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் எவிக்சனில் சேரன், ஷெரின், கவின் மற்றும் லாஷ்லியா ஆகிய நான்குபேரும் உள்ள நிலையில் யார் இன்று வெளியேறப்போவது என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் சேரன், லாஷ்லியா இருவரையும் கமல் வெளியேற சொல்வதுபோன்ற காட்சி வெளியாகி வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் சேரன் மற்றும் லாஷ்லியா இருவரும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி ஒரு ரூமிற்குள் செல்லுமாறு கூறுகிறார்.

இருவரும் ஒன்றாக வெளியேற போகிறார்களா? அல்லது கமல் ஏதேனும் ட்விஸ்ட் வைக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement