இந்தியா வீடியோ

அடக்கொடுமையே! தேனீக்கள் கூடுகட்டக்கூடிய இடமா இது? இணையத்தையே கலக்கும் ஷாக் வீடியோ இதோ!!

Summary:

beehive in youngman back

வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் தேனீக்கள் அதிகளவில்  காணப்பட்டு வருகின்றது. மேலும் அங்கு தேனீக்கள் வளர்ப்பது பிரபலமான ஒன்றாகவும் உள்ளது. அதுமட்டுமின்றி அந்த மாநிலத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி ஆண்டுதோறும் தேனீக்கள் தினமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நாகலாந்து விளையாட்டுதுறை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும்  அதில் தேனீக்கள் நிஜமாகவே எதிர்பாராத இடத்தில்தான் கூடு கட்டியுள்ளது. இப்படிப்பட்ட விஷயம் நாகலாந்தில்  மட்டும்தான் நடக்கும் என பதிவிட்டிருந்தார்.

மேலும் அந்த வீடியோவில் ஆண் நபர் ஒருவர் ஜீன்ஸ்,டிசர்ட் அணிந்தபடி நடந்து செல்கிறார் அவரது பின்புறத்தில் பேண்டின் மீது தேனீக்கள் கூடுகட்டியுள்ளது. இதனை பார்த்து அனைவரும் சாதாரணமாக சிரித்தபடி செல்கின்றனர்.

மேலும் தேனீக்கள் கூடுகட்டியிருப்பதை அவருடன் வந்த இளம்பெண் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.  இந்த வீடியோ வைரலான நிலையில் இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் அதனை கிண்டல் செய்யும்படி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்..


Advertisement