உலகெங்கும் கொரோனா வைரஸ் பீதி! பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

உலகெங்கும் கொரோனா வைரஸ் பீதி! பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!


Bcci closed for corono fear

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் உயிரைக் குடிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 7000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி 110க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர். அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளாக கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள மற்றும் பல நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

BCCI

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் அமைந்துள்ள இந்திய கிரிக்கெட் தலைமையிடமான பிசிசிஐ தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனைப் போலவே ட்விட்டர் மற்றும் கூகுள் நிறுவனமும் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது.