அடக் கொடுமையே... சிக்கன் கபாப்புல காரம் குறைவாக இருந்ததால் மனைவிக்கு சரமாரியான கத்திகுத்து... பதற வைக்கும் சம்பவம்!!
அடக் கொடுமையே... சிக்கன் கபாப்புல காரம் குறைவாக இருந்ததால் மனைவிக்கு சரமாரியான கத்திகுத்து... பதற வைக்கும் சம்பவம்!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகரில் ஆனேக்கல் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் - ஷாலினி தம்பதியினர். இவர்கள் இருவரும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று குடிபோதையில் வந்த சுரேஷ் தனது மனைவி ஷாலினியிடம் சிக்கன் கபாப் செய்து தரும்படி கேட்டுள்ளார். மனைவி ஷாலினியும் சிக்கன் கபாப் செய்து தந்துள்ளார். அதனை சாப்பிட்ட பிறகு சுரேஷ்க்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
காரணம் சிக்கன் கபாப்பில் காரம் இல்லாமல் இருந்ததால் மனைவி ஷாலினியிடம் சுரேஷ் வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து ஆத்திரமடைந்த சுரேஷ் கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியதுடன் உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார்.
அதில் ஷாலினி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த ஷாலினியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இதற்கிடையில் மனைவி இறந்து விட்டதாக நினைத்து சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.