புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
உஷார்.. இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..! பீதியில் பொதுமக்கள்..!!
அசாம் மாநிலத்தில் உள்ள நாகோன் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன மக்கள் தாங்கள் தங்கியிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இதனை போல இன்று ஆப்கானிஸ்தான் மாநிலத்தில் உள்ள பைசாபாத் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 என்று பதிவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக துருக்கி, சிரியா பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் தற்போது வரை 35,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியாவுக்கும் நிலநடுக்கம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவ்வப்போது இந்திய பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கம் மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஏற்படும் நிலநடுக்கம் இந்திய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.