இந்தியா

குடுத்துவச்ச மாப்பிளை!! ஒரே நேரத்தில் இரண்டு அத்தை மகள்களை திருமணம் செய்துகொண்ட மணமகன்.. வைரல் வீடியோ..

Summary:

தான் காதலித்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்டார் ஆந்திராவை சேர்ந்த இ

தான் காதலித்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்டார் ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர்.

தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் உட்னூர் மண்டலம் கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாடி அர்ஜுன். ஆதிவாசி பிரிவை சேர்ந்த இவர், ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் தனது அத்தை மகள்களான சுரேகா மற்றும் கனகா உஷாரானி என்ற இரண்டு பெண்களையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலித்து வந்துள்ளார் அர்ஜுன்.

இரண்டு பெண்களிடமும் தொலைபேசியில் தனது காதலை வளர்த்துவர, ஒருகட்டத்தில் இரண்டு குடும்பத்தினருக்கும் இந்த காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. சரி எந்த அத்தை மகளை அருஜுனுக்கு திருமணம் செய்துவைக்கலாம் என குடும்பத்தினர் யோசித்துவந்தநிலையில், இரண்டு பெண்களிடமும் பேசி, இருவரையும் ஒன்றாக திருமணம் செய்துகொள்வதாக கூறி, அவர்களையும் சம்மதிக்க வைத்துள்ளார் அர்ஜுன்.

ஆனால் இதற்கு இரண்டு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆதிவாசி சமூகத்தினர் மரபுப்படி, ஒரே நேரத்தில் ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று பெரியவர்கள் எவ்வளவோ எடுத்து கூற, ஆனால் இரண்டு பெண்களும் நாங்கள் அவரைத்தான் திருமண செய்துகொள்வோம் என ஒற்றை காலில் நிற்க, வேறு வழியில்லாமல் பெரியவர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

அதன்படி, அத்தை மகள்கள் இருவரையும் ஒரே நேரத்தில் தாலி கட்டி தனது மனைவிகளாக்கிக்கொண்டர் அர்ஜுன்.


Advertisement