இந்தியா

அம்பானி மகனோட ஒரு கல்யாண பத்திரிக்கையின் மதிப்பு இவ்வளவா? அப்படி அதில் என்ன இருக்கு தெரியுமா?

Summary:

ambani son marriage invitation cost

இந்தியாவின் மிக பெரும் கோடீஸ்வரான முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா தம்பதியின் மகள் இஷா அம்பானி. இவருக்கு பிரபல தொழில் அதிபர் ஆனந்த் பிரமாலுக்கும் கோடி கோடியாக பணத்தை இறைத்து மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 

ஆடம்பரத்தின் உச்சத்தில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் ஏராளமான திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், ஹாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்கள்  உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் அம்பானியின் மகன், ஆகாஷ் தனது சிறுவயது தோழியும் வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகளுமான ஷ்லோகா மேத்தாவை வரும் மார்ச் 10ஆம் திகதி திருமணம் செய்யவுள்ளார்.

தொடர்புடைய படம்

இதற்காக மிகவும் பிரமாண்டமாக திருமண அழைப்பிதழ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இளம் சிவப்பு நிறப் பேழைக்குள் பல பகுதிகளாக வடிவைக்கப்பட்ட இந்த அழைப்பிதழின் முதல் பக்கத்தில், சூரிய ஒளியில் தாமரை, நடனமாடும் மயில்கள், பசுக்கள் நடுவில் ராதையும் கிருஷ்ணரும் இருக்குமாறு படங்கள் இடம்பெற்றுள்ளது..

அதற்கு உட்புறம் வெள்ளி ஃபிரேமில் ராதா - கிருஷ்ணன் புகைப்படமும், மேற்கொண்டு திறந்தால், ரதத்தில் வெண்ணிற விநாயகரும் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர்இறுதியாக முகேஷ் அம்பானி  மற்றும் நீதா திருமணத்துக்கு அழைப்பு விடுக்கும் செய்தி இடம்பெற்றுள்ளது. இவ்வளவு பிரமாண்டமாக வடிவைக்கப்பட்டுள்ள  இந்த அழைப்பிதழின் மதிப்பு 1.5 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement