இது புதுசா இருக்கு!! குக்கு வித் கோமாளி சீசன் 7 போட்டியாளர்கள் யாரெல்லாம் பாருங்க!!
அமர்நாத் யாத்திரை முன்பதிவு எப்போது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இமயமலையில் அமர்நாத் குகை உள்ளது. இந்த குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தினை தரிசனம் செய்ய இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருடம்தோறும் இலட்சக்கணக்கில் பக்தர்கள் யாத்திரை வருவார்கள்.

நடப்பு வருடத்திலும் அமர்நாத் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக அமர்நாத் கோவில் குழு வாரியம் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளது. இதனையடுத்து, அமர்நாத் யாத்திரைக்கு இணையவழியில் ஏப்ரல் மாதம் விண்ணப்பம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வருடத்தில் கொரோனா பரவலால் குறைந்திருந்த மக்கள் வருகை நடப்பு வருடத்தில் அதிகளவு இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.