இந்தியா 18 Plus

வெறித்தனமாக முத்தம் கொடுத்த தம்பதியினர். நாக்கு சிக்கிகொண்டதால் வெட்டியதாக கூறும் கணவர்.

Summary:

Ahmadabad husband cuts wife tongue which stuck in his mouth

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர்கள் கணவன் மனைவியான ஆயுப் மன்சாரி மற்றும் தஸ்லீம். கடந்த வாரம் இவர்கள் இருவரும் வீட்டில் தனிமையில் இருந்த போது மாறி மாறி முத்தம் கொடுத்துள்ளனர். இருவரும் அதிவேகமாக செயல்பட்டதில் இருவரின் நாக்கும் ஒன்றோடு ஒன்றாக பின்னிக்கொண்டது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மனைவியை சமையல் அறைக்குள் அழைத்துச்சென்று அங்கிருந்த கத்தியால் மனைவியின் நாக்கை அறுத்துள்ளார் மன்சாரி. நாக்கு அறுபடத்தில் வாயில் இருந்து இரத்தம் வழிய அலறி துடித்துள்ளார் தஸ்லீம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மனைவியை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார் மன்சாரி.

பின்னர் தனது சகோதரிக்கு வீடியோ கால் செய்த தஸ்லிம் நடந்தது பற்றி கூறியுள்ளார், பின்னர் அவர் உதவியுடன் தஸ்லிமை  மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தஸ்லீம் சரியாக பேச முடியாமலும், உணவு சாப்பிட முடியாமலும் சிரமப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இதுகுறித்து கடந்த வாரம் வெளியான தகவல்களின்படி தனது படுக்கையில் படுத்திருக்கும்போது தனது கணவர் அருகில் வந்து தனக்கு முத்தம் கொடுக்குமாறு கேட்டதாகவும், தான் முத்தம் கொடுக்க செல்லும்போது அவர் தன்னுடைய நாக்கை கடித்துவிட்டு அதன்பிறகு கத்தியால் தனது நாக்கை வெட்டியதாகவும் தஸ்லீம் கூறியிருந்தார்.

தன்னிடம் கணவர் பணம் கேட்டு, தான் இல்லை என்று சொன்னதலையே அவர் இவ்வாறு நடந்துகொண்டதாக தஸ்லீம் தெரிவித்த நிலையில் தலைமறைவாக இருந்த மன்சூரை போலீசார் கைது செய்து விசாரித்ததில் முத்தம் கொடுக்கும்போது நாக்கு சிக்கி கொண்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் நாக்கை வெட்டியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.


Advertisement