அமோக ஆதரவில் 'அக்னிபத்'; கடற்படையில் சேர 7.5 லட்சம் பேர் விண்ணப்பம்: 82 ஆயிரம் பெண்கள் போட்டி..!

அமோக ஆதரவில் 'அக்னிபத்'; கடற்படையில் சேர 7.5 லட்சம் பேர் விண்ணப்பம்: 82 ஆயிரம் பெண்கள் போட்டி..!



Agni path in overwhelming support: 7.5 lakh people apply to join the Navy

இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளுக்கு 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இதனையடுத்து இந்திய விமானப்படையில் காலியாக உள்ள3 ஆயிரம் பணியிடங்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படும். பின்னர் 6 மாதங்கள் பயிற்சியை நிறைவு செய்த பின்பு 4 ஆண்டுகள் பணியில் இருப்பர். அதன் பின்பு சுமார் ரூ.11 லட்சம் பணிநிறைவு தொகை அளிக்கப்படும். இதன் பின்பு இவர்களுக்கு பணி  வழங்க மஹிந்திரா மற்றும் டாட்டா நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட பின்பு, வடமாநிலங்களில் போராட்டங்கள் நடந்தபோதிலும், அக்னிபத் திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்திய விமானப்படையில், சுமார் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியானது. ஜூலை 1 ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று கூறப்பட்டது. விண்பங்களை அனுப்பும் கால அவகாசம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், 3 ஆயிரம் பணியிடங்களுக்கு சுமார் 9 லட்சத்து 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கடற்படை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். விண்ணப்பித்தவர்களில் 82 ஆயிரத்து 200 பேர் பெண்கள் ஆவர்.