அசுர வேகத்தில் வந்த கார்..! ஒரே நேரத்தில் சைக்கிளில், பைக், கார் மூன்றிலும் மோதி கொடூரம்.! வீடியோ இதோ..!

அசுர வேகத்தில் வந்த கார்..! ஒரே நேரத்தில் சைக்கிளில், பைக், கார் மூன்றிலும் மோதி கொடூரம்.! வீடியோ இதோ..!


accident-BJZQ62

ஹரியானா மாநிலத்தின் யமுனா நகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அதிவேகத்தில் வந்த கார் அருகில் இருந்த வாகனங்களின் மீது மோதியதால் ஐந்து பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யமுனா நகர் பகுதியில் அதிவேகத்தில் வந்த ஹோண்டா சிட்டி கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முதலில் அருகில் வந்த பைக் மோதியுள்ளது. பின்னர் நடைப்பாதை வழியாக வந்து அங்கு நின்று கொண்டிருந்த காரின் மீது மோதி நிற்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

hariyana

மேலும் அந்த கார் மற்றொரு காரின் மீது மோதி நின்றதுடன் அதிவேகத்தில் ஓட்டி வந்த காரின் டிரைவர் காரை அப்படியே விட்டு விட்டு தப்பி சென்றுள்ளார். பின் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை எடுத்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.