Video : ஒரே நிமிடத்தில் 122 தேங்காய்கள் உடைத்து கின்னஸ் புத்தகத்தில் புதிய உலக சாதனை! 14 வருட சாதனையை முறியடித்து வாலிபர்! வியக்க வைக்கும் காட்சி..

கேரளா மாநிலத்தை சேர்ந்த அபீஷ் பி. டொமினிக், உலகத்தையே வியக்க வைத்தார். ஒரே கையை பயன்படுத்தி, வெறும் ஒரு நிமிடத்தில் 122 தேங்காய்கள் உடைத்து, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், ஜெர்மனியைச் சேர்ந்த முகம்மது கஹிரிமனோவிச் கடந்த 14 ஆண்டுகளாக வைத்திருந்த 118 தேங்காய்கள் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த சாதனையின் வீடியோ கின்னஸ் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், அபீஷின் உற்சாகம், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் குரல் ஒலிக்க, மிகுந்த தூண்டுதலோடு அவர் தேங்காய்களை அதிரடியாக உடைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
ஒரு நிமிடத்தில் 122 தேங்காய்களை உடைத்தவர், ஒரே வினாடியில் இரண்டே தேங்காய்களை உடைக்கும் வேகத்தில் செயல்பட்டுள்ளார். இது குறித்து அபீஷ் கூறும் போது, “நான் ஒரு தொலைதூர கிராமத்தில் பிறந்தவன். கின்னஸ் சாதனை என்பது ஒரு கனவு போல இருந்தது. ஆனால் மன உறுதி மற்றும் நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நான் நிரூபித்துள்ளேன்,” என்றார்.
இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் CPRF வீரரை காலால் மிதித்து! கூட்டமாக சேர்ந்து கொடூரமாக தாக்கிய யாத்ரீகர்கள்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
முன்னதாக, 2005 முதல் 2011 வரை முகம்மது கஹிரிமனோவிச், 65 முதல் 118 தேங்காய்கள் வரை சாதனைகளை முறியடித்திருந்த நிலையில், தற்போது அபீஷ் 122 தேங்காய்களுடன் புதிய வரலாறு எழுதியுள்ளார். இது இந்தியாவுக்கும் கேரள மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.
இதையும் படிங்க: தெய்வீக சக்தியா? கங்கை நதியில் மிதக்கும் 300கிலோ எடை கொண்ட கல்! பிரமிக்கும் மக்கள்! வைரலாகும் ஆச்சரிய வீடியோ!