10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆதார் வைத்துள்ளீர்களா??.. இதை அப்டேட் செய்யுங்க - அதிரடி அறிவிப்பு..!Aadhar kindly attention to update

 

ஒரே நாடு ஒரே தேசம் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையில் முதல் அடியாக இந்தியர்களின் அனைவரையும் ஓரணியில் இணைத்து, அவர்களின் தரவுகளை பெறவும், பல அலுவல் பிரச்சனையை சரி செய்யவும் ஆதார அட்டை மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த நிலையில், ஆதார் எண் வழங்கும் யுஐடிஏஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக தனித்து ஆதர் பெற்ற நபர்கள் தற்போது வரை எந்த புதிய விபரமும் சேர்க்கவில்லை என்றால் அதனை சேர்க்க வேண்டும்.

தனிநபர்கள் தங்களின் விவரங்களை புதுப்பிக்காதவர்கள் அதற்கான கட்டணம் செலுத்தி அடையாள இருப்பிட சான்றிதழ் போன்றவற்றை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள து. 

எனினும் இது கட்டாயம் இல்லை, விருப்பமுள்ளவர்கள் தங்களின் தனிப்பட்ட விபரங்களை அப்டேட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.