குடும்பத்தினருக்கே தெரியாமல் காதலியை 10 ஆண்டுகளாக வீட்டின் அறையில் மறைத்து வைத்திருந்த காதலன்.!

குடும்பத்தினருக்கே தெரியாமல் காதலியை 10 ஆண்டுகளாக வீட்டின் அறையில் மறைத்து வைத்திருந்த காதலன்.!


a-young-man-who-lived-with-his-girlfriend-without-the-k

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஹ்மான். இவரது வீட்டின் வீட்டு அருகே இருந்த சாஜிதா என்ற இளம்பெண் 10 வருடங்களுக்கு முன்பு மாயமாகி உள்ளார். அப்போது அவருக்கு வயது 18. இது குறித்து சாஜிதாவின் பெற்றோர் 2010 ஆம் ஆண்டில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அப்போது ரஹ்மான் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் சாஜிதா குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், சாஜிதா குறித்து தெரியவில்லை என கூறி உள்ளனர். இந்த நிலையில், சாஜிதாவை ரஹ்மான் கடந்த 10 ஆண்டுகளாக தனது சிறிய வீட்டில் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்துள்ளது.

lovers

இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், காணாமல் போன பெண், தன் வீட்டின் அருகில் உள்ள காதலன் வீட்டில், ஒரே அறையில், 10 ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வந்துள்ளார். அந்த அறையில் கழிப்பறை கூட இல்லை. இதனால், இரவில் மட்டும் வீட்டின் கதவு அல்லது ஜன்னலை திறந்து, அந்த பெண் வெளியே வந்துள்ளார். காதலன் வெளியே செல்லும் போது, அறையை பூட்டி விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக தெரிவித்தனர்.

இருவர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்தியபோது காதலனுடன் தான் வாழ்வேன் என, அந்த பெண் கூறியதால், இருவரையும் நீதிமன்றம் விடுவித்து விட்டது. பெண்ணின் குடும்பத்தினரும் இதை எதிர்க்கவில்லை என்று கூறினார். இந்தநிலையில், போலீசார் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் ஒன்றாக வாழ முடிவு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, அந்த பெண் அந்த நபருடன் செல்ல அனுமதிக்கப்பட்டார்.