இந்தியா

74 வயதில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பெண்ணின் கணவருக்கு இரண்டு வாரங்களில் நடந்த சோகம்!

Summary:

74 years old women gat baby

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆந்திராவில் 74 வயது பாட்டி ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட்டவைத்தது. ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நெல்லபார்திபடு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(80). இவரின் மனைவி இராமட்டி மங்கையம்மா(74). இந்த தம்பதியர் 1962ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடந்து பல வருடங்கள் கழித்தும் இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில் கடந்த வருடம் குண்டூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையை அணுகியுள்ளனர். அங்கு மங்கையம்மாவை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரத்த கொதிப்பு, சர்க்கரை போன்ற வியாதிகள் இல்லாததாலும் இவரது மரபணுக்கள் குழந்தைபெற தகுதியுடையவையாக இருந்ததாலும் இன் விட்ரோ கருத்தரித்தல் முறையில் மருத்துவர்கள் மங்கையம்மாவை கருத்தரிக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மங்கையம்மாவுக்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இதன்மூலம் அதிக வயதில் குழந்தைப்பேற்றை பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் மங்கையம்மா. இதையடுத்து குழந்தை பிறந்து இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், மங்கம்மாவின் கணவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்ததால், கணவர் இராமட்டி ராஜா மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். மேலும் குழந்தை பிறந்ததற்கு கடவுள் மற்றும் மருத்துவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று உணர்ச்சி பொங்க கூறினார். உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு தற்போது மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement