அரைசதம் அடிக்கபோகும் பிரதமர் மோடி; எதில் தெரியுமா?

மாதந்தோறும் பொதுவிஷயங்கள் குறித்து வானொலி நிகழ்ச்சியில் மக்களுடன் உரையாடிவரும் பிரதமர் நரேந்திர மோடி, மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பின் இன்று 50வது முறையாக வானொலியின் மான்கி பாத் நிகழ்ச்சியில் இன்று உறையாற்றுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, 'மன்கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களுடன் வானொலியில் பேசிவருகிறார். மாதந்தோறும் நடைபெறும் மான்கி பாத் நிகழ்ச்சியில் நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். பொதுமக்கள் அனுப்பும் கேள்விகளுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் பதில்அளித்து வருகிறார் பிரதமர்.
இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில், நிலம் கையகப் படுத்தும் சட்டம், விவசாயிகள் பிரச்னை, மாணவர்கள் முன்னேற்றம், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்து பிரதமர் பேசியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இணைந்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று மக்களுடன் உரையாற்றியுள்ளார்.
இந்நிலையில் நான்கரை ஆண்டுகாள பாஜக ஆட்சியில் இதுவரை 49 முறை பிரதமர் இந்த மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இன்று பேசுவது 50வது முறை.
இதனைப்பற்றி கருத்து தெரிவித்துள்ள சிலர் இத்தனை முறை வானொலியில் பேசியுள்ள பிரதமர் இதுவரை ஒருமுறை கூட பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்? 50 ஆவது முறை பேசினாலும் சரி 100 வது முறை பேசினாலும் சரி...ஏழை மக்களுக்காக செய்தது என்ன இருக்க போகிறது? என கேள்வி எழுப்பி உள்ளனர்.