கொரோனா சமயத்தில் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு! 5 பேர் பரிதாப பலி! பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அச்சம்!

கொரோனா சமயத்தில் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு! 5 பேர் பரிதாப பலி! பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அச்சம்!



5-person-died-in-kerala-landslide

கேரளாவில் பருவகால மழைப்பொழிவை தொடர்ந்து பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.  இதனால், நகரங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிலாம்பூர் பகுதியில் தொடர் கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து, தெருக்களில் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை, ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி என்கிற பகுதியில் அமைந்துள்ள தேயிலை எஸ்ட்டேட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புகள் மண்ணில் சரிந்தன. இதில், வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலையில், இந்தநிலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதுவரை 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். சம்பவ பகுதிக்கு போலீசார், தீயணைப்பு துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர்.  மீட்பு பணியை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் கேரளா முதல்வர் பினராயி விஜயன்,