இந்தியா

கொரோனாவால் உயிரிழந்தவரை தொட்டு அடக்கம் செய்த கிராமத்தினர்! அடுத்தடுத்தாக நேர்ந்த பரிதாபங்கள்!!

Summary:

ராஜஸ்தான் சிகார் மாவட்டம், கேர்வா கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலைய

ராஜஸ்தான் சிகார் மாவட்டம், கேர்வா கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 21ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை பாதுகாப்பாக பிளாஸ்டிக் கவரில் சுற்றி, அடக்கம் செய்யுமாறு கிராமத்தினரிடம் கொடுத்துள்ளனர். 

இந்தநிலையில் கிராமத்தினர் அவரது உடலை வெளியே எடுத்து, அவரை தொட்டு அடக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த இறுதி சடங்கில் 150 பேர் கலந்து  கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பிறகு இறுதி சடங்கில் பங்கேற்ற 21 பேர் அடுத்ததாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுகுறித்து சுகாதார அதிகாரி கூறுகையில், இறுதி சடங்கில் பங்கேற்று உயிரிழந்த 21 பேரில் 4 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது. மேலும் இறந்தவர்களில் பெரும்பாலோனோர் வயதானவர்கள். சமூக பரவல் ஏற்படாமலிருக்க இறுதி சடங்கில் பங்கேற்ற அனைவரின் குடும்பத்தாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்பணிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், மக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Advertisement