இந்தியா

நாடு முழுவதும் மதுபான கடைகள் அடைப்பு.! விரக்தியில் 38 வயது நபர் எடுத்த விபரீத முடிவு.!

Summary:

21 days closed for all tasmark shop so 38 years old man suside

கொரோனா வைரஸ் கோரதாண்டவத்தால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்த ஒரு மனிதரும் அவசியம் இல்லாமல் வெளியே வரகூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி வெளியே வருபவர்களை போலீசார் விரட்டி அடித்து வருகின்றனர்.

மேலும் 21 நாட்கள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அதில் நாடு முழுவதும் உள்ள மதுபான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கேரளாவின் திரிசூர் மாவட்டத்தில் குன்னகுளம் பகுதியைச் சேர்ந்த சுனோஜ் குலங்கர (38) என்ற நபர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். ஆனால் தற்போது மதுக்கடைகள் அடைக்கப்பட்டு மது குடிக்காமல் இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளான சுனோஜ் விரக்தியில் தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 


Advertisement