இந்தியா உலகம்

சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம்! வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

20 indian army man died in ladak

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் இந்தியத் தரப்பில் 20 பேர் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 40  ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியா - சீனா ராணுவம் இடையே மோதல் வெடித்து பலி ஏற்பட்டிருப்பது என்பது இதுவே முதன்முறையாகும். 

இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை தொடர்பாக சமீபத்தில் இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் இரு நாட்டின் ராணுவ படைகளும் சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து விலக்கிக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த திடீர் தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் இந்தியத் தரப்பில் 20 பேர் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது லடாக்கில் சண்டை நடந்த கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து இரு தரப்பு ராணுவத்தினரும் விலகிவிட்டதாகவும் அங்கு நிலைமை அமைதியாக இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருப்பதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Advertisement