ஒவ்வொரு பாகமாக செயலிழந்த பரிதாபம்..! 2 வயதில் இறந்த குழந்தை..! தீராத சோகத்திலும் பெற்றோர் செய்த காரியம்...!



2 years old baby dies for unknown disease

மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் சாத்னம் சிங் சாப்ரா. இவருக்கு ஆசீஸ் கவுர் சாப்ரா என்ற 2 வயது பெண் குழந்தை ஓன்று இருந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில் இருந்தே குழந்தையின் உடலில் இருக்கும் பாகங்கள் ஒவொன்றாக செயலிழக்க தொடங்கியுள்ளது.

எத்தனையோ மருத்துவர்கள், எவ்வளவோ சிகிச்சை வழங்கியும் குழந்தையின் பிரச்னையை சரி செய்ய இயலவில்லை. பிரச்சனைக்கு காரணம் என்ன? இதற்கு தீர்வு என்ன என கண்டறிவதற்குள் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து சமீபத்தில் அந்த குழந்தை இறந்துள்ளது.

Mystery

இறந்த குழந்தையை அடக்கம் செய்யாமல் மருத்துவ ஆராய்ச்சிக்காக குழந்தையின் உடலை பெற்றோர் கொடுத்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், எங்களுடைய குழந்தையின் உடல் மூலம் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, மற்ற குழந்தைகளின் நோய்களுக்கு தீர்வு கிடைக்க உதவட்டும் எனவும், அவளுடைய கண்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.