காதலி கண்முன் துள்ளத்துடிக்க ஓடஓட விரட்டி கொல்லப்பட்ட 18 வயது இளைஞர்.. சிதறி ஓடிய மக்கள்.. சினிமா பாணியில் படுபயங்கரம்.!



18-Year-Old Youth Hacked to Death in Front of Girlfriend at Kovilpatti Bus Stand Over Love Affair

Thoothukudi Crime News: காதலி கண்முன் பேருந்து நிறுத்தத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

உறவினர்கள்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, கரடிகுளம் பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம். இவரின் மகன் சஞ்சய் (வயது 18). இவர் சென்னையில் சிற்பக்கலைஞராக வேலை பார்த்து வருகிறார். கோவில்பட்டியை அடுத்துள்ள கொச்சிலாபுரம் பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரின் மகள் கனகலட்சுமி. இவரும், சஞ்சயும் உறவினர்கள் ஆவார்கள். இருவருக்கும் இடையே காதல் உறவு இருந்து வந்துள்ளது.

இதையும் படிங்க: 'என் நம்பரை பிளாக் பண்றியா' காதலனை வீடுபுகுந்து கதைமுடித்த காதலி.. பகீர் சம்பவம்.!

முடிவுகட்டிடலாம்:

இந்த காதலுக்கு கனகலட்சுமியின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் சஞ்சய், தனது நண்பர்களுடன் சென்னை செல்ல கோவில்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது, குமார், அவரின் உறவினர்கள் மாரிமுத்து, சங்கர நாராயணன் ஆகியோர் நேரில் சென்றுள்ளனர். மேலும், கண்கலட்சுமியையும் சஞ்சையுடன் சந்தித்து பேசி காதல் எதிர்ப்புக்கு முடிவுகட்டிவிடலாம் என கூறியுள்ளனர்.

Crime news

கத்திகுத்து:

இதனால் கனகலட்சுமி, அவரின் தந்தை, உறவினர்கள் என அனைவரும் கோவில்பட்டி பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு பேருந்தில் ஏறுவதற்காக நண்பர்களுடன் இருந்த சஞ்சயை குமார் அழைத்து வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில் சஞ்சயை குமார் கத்தியால் குத்தி இருக்கிறார். இதனால் பதறிப்போன சஞ்சய், அவரின் நண்பர்கள் பேருந்து நிறுத்தத்தில் ஓட்டம் பிடித்துள்ளனர். தொடர்ந்து கழுத்து உட்பட உடல் பாகத்தில் கத்திக்குத்து வாங்கிய சஞ்சயை விடாமல் துரத்திச் சென்று கொலை சம்பவம் நடந்துள்ளது.

கொடூரம்:

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சஞ்சயை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் குமார், சங்கர நாராயணன், மாரிமுத்து ஆகியோரை கைது செய்தனர். சினிமா பாணியில் நடந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 

இதையும் படிங்க: மனைவி வெளியே போன கேப்பில் கள்ளக்காதலியுடன் ஜல்சா.. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக்கொலை.!