இந்தியா

சோஃபாவுக்கு பக்கத்துல என்ன அது புது உருவம்.? அருகில் சென்று டார்ச் அடித்து பார்த்த மனீந்திரனுக்கு உடம்பெல்லாம் நடுங்கி போச்சு.!

Summary:

16 feet king cobra rescued from house in Kerala

கேரளா மாநிலத்தில் வீட்டில் உள்ள அறையில் இருந்த சோஃபாவுக்கு அடியில் இருந்து 16 அடி நீளம் கொண்ட கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆரியங்காவு என்னும் கிராமத்தில் வசித்துவருகிறார் மனீந்திரன். இவரது வீடு மலை அடிவாரத்தில் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டின் அறையில் கிடந்த சோஃபாவுக்கு அருகில் ஏதோ வித்தியாசமான ஒரு உருவம் இருப்பதை பார்த்த மனீந்திரன் அருகில் சென்று டார்ச் அடித்து பார்த்தபோது அது ராஜநாகம் என்பது தெரியவந்தது.

கொடிய விஷம் கொண்ட ராஜநாக பாம்பை வீட்டிற்குள் பார்த்ததும் மனீந்திரன் உடம்பெல்லாம் நடுங்கி போச்சு, உடனே இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். வனத்துறையினர் உடனே வாவா சுரேஷ் என்ற பாம்பு பிடிக்கும் வீரருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ராஜ நாக பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவரான வாவா சுரேஷ் உடனே மனீந்திரன் வீட்டிற்கு விரைந்துசென்று அங்கிருந்த 16 அடி நீள ராஜநாக பாம்பை பிடித்துள்ளார். பின்னர் பாம்பை ஒரு பெரிய பைக்குள் போட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டுசென்று விட்டுள்ளார் வாவா சுரேஷ். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..


Advertisement